ஆகாசபுரீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா

இக்கோவிலில் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.
ஆகாசபுரீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.
ஆகாசபுரீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி கிராமத்தில் மங்களாம்பிகா சமேத ஆகாசபுரீஸ்வரர் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

இன்று காலை கணபதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூல மந்திர , காயத்திரி மந்திர ஹோமங்கள், பூர்ணாஹூதி, மங்களாம்பிகை சமேத ஆகாசபுரீஸ்வரருக்கு ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை திருக்கல்யாணம் உற்சவம் , சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com