ஆத்தூர் கோவிலில் வருஷாபிஷேகம்

ஆத்தூர் வடக்கு ரதவீதி நல்ல பிள்ளையார் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் கோவில் விமானத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.
வருசாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.
வருசாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

ஆத்தூர்:

ஆத்தூர் வடக்கு ரதவீதி நல்ல பிள்ளையார் கோவி லில் வருஷாபிஷேகம் நடை பெற்றது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு மஹா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. பின்னர் கோவில் விமானத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து நல்லபிள்ளை யார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடை பெற்றது. தொடர்ந்து பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை ஆத்தூர் வடக்கு ரதவீதி நல்லபிள்ளையார் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com