களக்காடு கோவிலில் வருசாபிஷேக விழா

வருசாபிஷேகத்தையொட்டி கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், நடராஜர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் நடந்தது.
சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். 
சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். 
Published on

களக்காடு:

களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன.

அதனைதொடர்ந்து கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, வருசாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், நடராஜர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் நடந்தது.

இரவில் விஷேச அலங்கார தீபாராதனைகளுக்கு பின் சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com