சிவகிரியில் சேனை விநாயகர் கோவில் வருசாபிஷேகம்

சிவகிரி சேனை விநாயகர் கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது. விநாயகருக்கு 18 வகையான நறுமண பொருட்கள் மூலம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட காட்சி.
கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட காட்சி.
Published on

சிவகிரி:

சிவகிரி சேனைத்தலைவர் சண்முகவிலாஸ் கிளை மண்டபத்திற்கு பாத்தியப்பட்ட சேனை விநாயகர் கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது. நேற்று அதிகாலை முதல் யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், குங்குமம், இளநீர் உள்பட 18 வகையான நறுமண பொருட்கள் மூலம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் சேனை தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன், செயலர் தங்கேஸ்வரன், பொருளாளர் ஆறுமுகம், துணை தலைவர் கலைஞர் மூக்கையா மற்றும் கிளை சங்க நிர்வாகிகள், விழா கமிட்டி நிர்வாகிகள் தலைவர் ராசு, கணக்கர் குருசாமி, பொருளாளர் கணேசன், பூசாரி குருவு, மயில் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com