நவசக்தி விநாயகர் கோவிலில் வரலட்சுமி விரதம்

செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
வரலட்சுமி விரதம் நடந்தது.
வரலட்சுமி விரதம் நடந்தது.
Published on

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைதுறை நவசக்தி விநாயகர் ஆலயத்தில் வரலட்சுமி நோம்பு நடைபெற்றது. வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள்.

இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். அதுசமயம் திருப்பலைதுறை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமியை பூஜை செய்து வழிபட்டனர்.

48 நாட்கள் பெண்கள் விரதமிருந்து வரலட்சுமி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com