தஞ்சையில் சாலை தடுப்பு கம்பியில் வேன் மோதி விபத்து-9 பேர் படுகாயம்

வேன் தஞ்சை அருகே புனல்குளம் பகுதியில் வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்து.காயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சையில் சாலை தடுப்பு கம்பியில்  வேன் மோதி விபத்து-9 பேர் படுகாயம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை இனாத்துக்கன்பட்டி யை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது 70 ). இவர் அதே பகுதியை சேர்ந்த வேம்பரசி, ரங்கநாதன், ராஜா, மகாலட்சுமி உள்பட சிலருடன் ஒரு வேனில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் துக்க வீட்டுக்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து அதே வேனில் தஞ்சைக்கு புறப்பட்டனர். அந்த வேன் தஞ்சை அருகே புனல்குளம் பகுதியில் வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கம்பியில் மோதியது. இதில் அஞ்சம்மாள் உள்பட 9 பேர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com