ஓசூர் அருகே வேன் மோதி எலக்ட்ரீசியன் பலி

ஓசூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீசியன் மீது வேன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பெலத்தூர் அருகே உள்ள சூடாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் பாலாஜி (வயது 19). 

எலக்ட்ரீசியான இவர், கடந்த 17-ந் தேதி மதியம்  அதே ஊரை சேர்ந்த பரத் (20) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் கொளதாசபுரம் - சூடுகானப்பள்ளி சாலையில் சென்றார். 

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜியையும், பரத்தையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். பரத் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த விபத்து குறித்து பாகலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com