

பல்லடம் :
கடந்த 1982 ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நடைபெற்ற நவீன தாராளமய கொள்கைகளை எதிர்த்தும் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்தும் நடந்த பாரத் பந்த் போராட்டத்தின்போது, தஞ்சாவூரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 19-ந்தேதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்லடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார்.
மாநில துணைத்தலைவர் நாமக்கல் பி.பெருமாள், மாவட்ட செயலாளர் ஆர்.குமார், சிஐடியு. மாவட்ட துணைத் தலைவர் கே.உன்னிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சியில்இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜி.சுந்தரம்,சிஐடியு. மாவட்ட பொருளாளர் ஜி.சம்பத், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளர் தண்டபாணி, பல்லடம் ஒன்றிய தலைவர் கே.வி.சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, சி.பி.எம். பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.