கோவில்பட்டி புற்றுக்கோவிலில் வளர்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை

ஆனி மாதம் வளர்பிறை பஞ்சமியில் வராகி அம்மன் அவதரித்ததை முன்னிட்டு ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.சப்த கன்னிகளுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
சப்த கன்னிகளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்ற காட்சி.
சப்த கன்னிகளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்ற காட்சி.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆனி மாதம் வளர்பிறை பஞ்சமியில் வராகி அம்மன் அவதரித்ததை முன்னிட்டு ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சப்த கன்னிகளுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாராயணன், பிரேமா முருகன், சீதா எட்டப்பன் ஆகியோர் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com