கந்துவட்டி புகார்: நிதி நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை

கந்துவட்டி புகாரின் பெயரில் நிதி நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை ஈடுப்பட்டனர். பணத்துக்கு மட்டும் கவிதா ரூ. 6 லட்சம் வட்டி கட்டி உள்ளார்.
கந்துவட்டி புகார்: நிதி நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை
Published on

விழுப்புரம்:

திண்டிவனம் கிரண்டி யாபுரத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 31). இவர் கடந்த 2018-ம் ஆண்டு திண்டிவனம்- செஞ்சி சாலையில் உள்ள நிதி நிறுவனத்தில் ரவி என்பவ ரிடம் ரூ. 7 லட்சம் கட ன்வாங்கி இருந்தார்.இந்த பணத்துக்கு மட்டும் கவிதா ரூ. 6 லட்சம் வட்டி கட்டி உள்ளார். ஆனார் கடந்த 1-ந் தேதி பணத்தை கேட்டு ரவி, கவிதாவை மிரட்டியதாக புகார் எழுந்தது. இதுபற்றி கவிதா கூடுதல் போலீஸ் சூப்பிர ண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் வெள்ளி மேடு போலீசார் இன்று நிதி நிறுவ னத்தில் அதிரடி சோதனைநடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com