திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.
திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே  அடையாளம் தெரியாத  வாகனம் மோதி மூதாட்டி பலி
Published on

விழுப்புரம்:

திண்டிவனம் செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் பலமாக மோதியுள்ளது .

இதில் தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டி சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவத்திற்க்கு நேரில் வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்த மூதாட்டியின் மீது மோதிய வாகனம் குறித்து பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com