ஒகேனக்கல் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு

ஒகேனக்கல் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை போலீசார் மீட்டனர்.வீட்டில் இருந்து மாயமானவர் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால், பிணமாக மீட்கப்பட்டார்.
ஒகேனக்கல் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு
Published on

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலத்தினை போலீசார் மீட்டனர். பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்பகுதியில் பாசக்கல்சுனை பகுதியில் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியபடி பிணம் இருப்பது வனத்துறையினருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். வனப்பகுதியில் அழுகிய நிலையில் இருந்த பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நபர் பென்னாகரம் அருகே போடூர் இருளர் காலனி பகுதியைச் சேர்ந்த ஊமையன் மகன் ஜடையன் (வயது 60) என்பதும், ஆடிப்பெருக்கின்போது மது அருந்த பணம் தராததால் மனைவியிடம் தகராறு செய்து வீட்டில் இருந்து மாயமானதாகவும், அவருடைய மகன்கள் தந்தையை தேடி வந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com