உடுமலை ராமசாமி நகரில் கட்டுமான பணி முடிந்த நூலகத்தை திறக்க கோரிக்கை

நூலகம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களும் பயனுள்ள வகையில் இதனை பயன்படுத்த முடியும்.
திறக்கப்படாமல் இருக்கும் நூலக கட்டிடம்.
திறக்கப்படாமல் இருக்கும் நூலக கட்டிடம்.
Published on

உடுமலை:

உடுமலை ராமசாமி நகரில் ரூ.  8 லட்சத்து 50 ஆயிரம் செலவில் நூலக கட்டிடம் கட்டப்பட்டது.  இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  

ஆனாலும்  நூலகம் திறக்கப்படாமல் உள்ளது.  இந்த நூலகத்தை சுற்றிலும் ராமசாமி நகர்,  தில்லை நகர்,  ருத்ரப்பநகர்,  கங்காதரன் லே-அவுட் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.  இந்தப் பகுதியில் உள்ளவர்கள் டவுனில் உள்ள நூலகங்களையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.  

பள்ளி மாணவ ,மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த நூலகம் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கினால் பயனாக இருக்கும். மேலும்  போட்டித் தேர்வு மாணவர்கள் மற்றும் முதியோர் அதிகம் பயன்படுத்துவார்கள்.  

இந்த பகுதி குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களும் பயனுள்ள வகையில் இதனை பயன்படுத்த முடியும். எனவே  இந்த நூலகத்தை திறந்து  மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com