தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on

மதுரை:

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதன்படி இன்று காலை முதல் முகாம் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக மாவட்டத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த முதியவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.

அவரிடம் போலீசார் விசாரித்தனர். அவர் கரிமேடு மோதிலால் மெயின்ரோடு, சாமியார் மடம் தெருவைச் சேர்ந்த சுப்பையா (68) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் மேலும் விசா ரணை நடத்தினர்.

அப்போது அவர் “எனக்கு சொந்தமான நிலத்தை ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். நான் இது தொடர்பாக கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுப்பதற்காக இன்று காலை புறப்பட்டு வந்தேன். அப்போது மன விரக்தி காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன்” என்றார்.

இதையடுத்து தல்லா குளம் போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டி செல்வி. இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் நுழை வாயிலில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பாண்டிச்செல்வி யின் பையில் மண்எண்ணை பாட்டில் இருந்தது தெரிய வந்தது.

அவரிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். அப்போது பாண்டிச்செல்வி, எனது கணவர் கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று விட்டார். அவருடன் என்னை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com