திண்டுக்கல்லில் குட்கா பதுக்கிய 2 பேர் கைது

திண்டுக்கல்லில் வீட்டில் குட்கா பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

குள்ளனம்பட்டி, பிப்:

தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டபோதும் ரகசியமாக பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து குட்கா கடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பதுக்கப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தோமையார்புரம் பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி குட்கா விற்கப்படுவதாக எஸ்.பி.தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ஷேக் தாவூத் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 70 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ராஜா முகமது (வயது 60), அபுபக்கர் (40) ஆகிய இருவரையும் கைது செய்து தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com