பெரியகுளத்தில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

பெரியகுளத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் கருப்பையா (வயது41). இவர் மீது கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதேபோல் வடகரையை சேர்ந்த சந்தானம் (28). இவர் மீது அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஸ்டோங்கரே பரிந்துரையின் பேரில் கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார் சந்தானம் மற்றும் கருப்பையாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com