சோழிங்கநல்லூர் பகுதியில் வாகனங்களில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

பேட்டரி திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க செம்மஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ரியாசுதீன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 2 பேரிடம் செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடமிருந்து 20 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
சோழிங்கநல்லூர் பகுதியில் வாகனங்களில் பேட்டரி திருடிய 2 பேர் கைது
Published on

செம்மஞ்சேரி:

சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் மற்றும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து பேட்டரிகள் திருடப்படுவதாக செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார்க்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து பேட்டரி திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க செம்மஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ரியாசுதீன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சோழிங்கநல்லூர் கே.கே.சாலை வழியாக சந்தேகத்துக்கு இடமாக 2 பேர் கைப்பையுடன் சுற்றித்திரிந்ததை கண்டு அவர்கள் வைத்திருந்த கைபையை சோதனை செய்தனர். அதில் வாகனங்களின் பேட்டரிகள் இருந்தது.

பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சோழிங்கநல்லூரை சேர்ந்த லோகேஷ் (வயது 20), காரப்பாக்கத்தையை சேர்ந்த மணிகண்டன் (20) ஆகிய இருவரும் இரவு நேரங்களில் வாகனங்களில் இருந்து பேட்டரி திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடமிருந்து 20 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com