நாட்டு வெடிகுண்டு பதுக்கிய 2 பேர் கைது

ஆண்டிபட்டியில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தெற்கு காப்புக்காடு சந்தை மலை பகுதியில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

சந்தேகமடைந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையில் காட்டுப்பன்றி வேட்டைக்கு பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

யூ டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாகவும், இதனை காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்கு கொண்டு சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதனை பறிமுதல் செய்து ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். ஏத்தகோவிலைச் சேர்ந்த வேலுச்சாமி (வயது 29), பாலக்கோம்பையைச் சேர்ந்த சிவக்குமார் (26) ஆகிய 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com