அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்திய இருவர் கைது

சண்டைக்கு பயன்படுத்திய 2 சேவல்கள் பறிமுதல்.வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை.
கைது செய்யப்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்டவர்கள்.
Published on

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள்கோவில் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ. செந்தில்குமார் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்று போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது சுந்தரபெருமாள் கோவில் மணவாளம்பேட்டை தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் ஆதிகேசவன் (வயது 19), சுந்தர பெருமாள் கோவில் வெள்ளாளர் தெருவை சேர்ந்த செல்வகுமார் (19) ஆகிய 2 பேரும் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சண்டைக்கு பயன்படுத்திய 2 சேவல்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com