

செய்துங்கநல்லூர்:
திருச்செந்தூர்- பாலக்காடு ரெயில் கொரோனா காலத்திற்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படுகிறது. ஆனால் முன்பு போல செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை.
ஆனால் இங்கு பாசஞ்சர் ரெயிலாக இயங்கி வந்த திருச்செந்தூர்-நெல்லை ரெயிலும் விரைவு ரெயிலாக இயக்கப்பட்டு தற்போது செய்துங்கநல்லூர், தாத ன்குளம், ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்கிறது. அதேபோல் திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நின்று செல்கிறது.
எனவே பாலக்காடு -திருச்செந்தூர் ரெயில் ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், தாதன்குளம் ரெயில் நிலையங்களில் நின்ற செல்ல வலியுறுத்தி செய்துங்கநல்லூர் தபால் நிலையம் முன்பு கடந்த 25-ந் தேதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று (1-ந் தேதி) தபால் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம், 3-ம் கட்டமாக வருகிற 8-ந் தேதி செய்துங்கநல்லூரில் கடை யடைப்பு போராட் டமும், 4-ம் கட்டமாக 15-ந் தேதி செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் முன்பு தொடர் உண்ணா விரத போராட்டமும், 5-ம் கட்டமாக 22-ந் தேதி செய்துங்கநல்லூரில் ரெயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் தொழில் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில் 2-வது கட்ட போராட்டம் நேற்று நடைபெற்ற இருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் போராட்டத்தில் ஈடுபட கூடாது என டி.எஸ்.பி வெங்கடேஷ் கேட்டு கொண்டார். இதனால் தொடர் போராட்டத்தினை கைவிடுவதாக அறிவித்தனர்.
தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் டி.எஸ்.பி. வெங்கடேஷ் முன்னிலையில் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சம்பந் தபட்ட ரெயில்வே அதிகாரிகளுடன் பேசி செய்துங்கநல்லூர் உள்பட 3 இடங்களில் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.