சனிபிரதோஷ விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது
சனிபிரதோஷ விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சனி பிரதோஷ விழா

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சனிபிரதோஷ விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.

பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், சனிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷம் அதாவது சனி பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக் கழியாத நிலையையும் அளிக்கும்.

சகல தோஷமும் போக்கி சந்தோஷம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஐதீக வாக்காகும். இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்து வைத்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com