செய்துங்கநல்லூரில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

செய்துங்கநல்லூர் தர்காவில் மதநல்லிணக்க கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய கந்தூரி விழா
கொடியேற்றத்துடன் தொடங்கிய கந்தூரி விழா
Published on

செய்துங்கநல்லூர்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் இருக்கும் பீமா அம்மா மாஹீன் அபுபக்கர் ஒலியுல்லா தர்காவில் 80-வது ஆண்டு மத நல்லிணக்க கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கந்தூரி விழாவை முன்னிட்டு தர்காவில் இருந்து கொடி ஊர்வலமாக முக்கிய தெருக்கள் வழியாக வீதி உலா வந்தது.

அதன் பின்னர் தர்கா முன்பு உள்ள கொடி மரத்தில் கந்தூரி விழா கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் மற்றும் கோவில்பத்து பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com