சாத்தான்குளம் அருகே மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் அருகே மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் ஒரு மாணவிக்கு பட்டம் வழங்கப்பட்ட காட்சி.
விழாவில் ஒரு மாணவிக்கு பட்டம் வழங்கப்பட்ட காட்சி.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பிறைகுடியிருப்பு சிவந்தி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி நிறுவனர் சிவந்தி முருகேசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பாஸ்கரன் ராஜபால் முன்னிலை வகித்தார். 

சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் மருத குட்டி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 2017-2020 கல்வி ஆண்டிற்கான கல்லூரி மாணவி மகேஸ்வரி பல்கலைக்கழகத் தேர்வில் தமிழ் துறை முதன்மை பாடத்தில் நான்காவது இடம் பெற்றுள்ளார். 

இவரைப் பாராட்டி கல்லூரி நிறுவனர் அந்த மாணவிக்கு அவர் செலுத்திய மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் முழுவதும் ஊக்கத்தொகையாக திரும்ப வழங்கி வாழ்த்தினார்.

 2017-2021 கல்வியாண்டில் வனிதா, தில்லை செல்வி ஆகிய இரு மாணவிகளும் பல்கலைக்கழக தேர்வில் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.வர்களை வாழ்த்தி பட்டங்களை வழங்கி பல்கலைக்கழக பதிவாளர் மருத குட்டி சிறப்புரையாற்றினார். 

ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி வாழ்த்தி பேசினார். விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் ரேவதி, ஆங்கிலத்துறை தலைவர் தமிழ்செல்வி, வணிகவியல் துறை தலைவர் ஸ்டெல்லா மேரி, கணிதவியல் துறை தலைவர் வேல்ராஜ் உள்பட பேராசிரியர்கள்,மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக விழாவிற்கு வருகை தந்த பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் கல்வியாளர்களுக்கு கல்லூரி நிறுவனர் சிவந்தி முருகேசன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கல்லூரி தாளாளர் மருத்துவர் சரவணன் நிர்வாக இயக்குனர் முத்துக்குமரன் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com