இருசக்கர வாகனத்தை திருட முயன்ற லாரி டிரைவர்கள் 2 பேர் கைது

தினேஷ்(வயது30) தனியார் பேக்கரியில் கேசியராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இருவர் திருட முயன்றனர். இதனைக் கண்ட தினேஷ், கூச்சலிட்டார்.
இருசக்கர வாகனத்தை திருட முயன்ற லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது30). இவர் அங்குள்ள தனியார் பேக்கரியில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இருவர் திருட முயன்றனர்.

இதனைக் கண்ட தினேஷ், கூச்சலிட்டார். உடனே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர். இருவரையும் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தினேஷ் இது குறித்து புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்கள் வாழப்பாடியை அடுத்த செக்கடிப்பட்டியைச் சேர்ந்த கண்ணதாசன் (28). பாலமணிகண்டன், (20). என்பதும், இருவரும் லாரி டிரைவர்கள் என்றும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com