கணவர் முன்பு இளம் பெண்ணை தாக்கி நகை பறிப்பு

திருச்சியில் பரபரப்பு கணவர் முன்பு இளம் பெண்ணை தாக்கி நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை வீச்சு
கணவர் முன்பு இளம் பெண்ணை தாக்கி நகை பறிப்பு
Published on

திருச்சி,

திருச்சி கே.சாத்தனூர் வடுகபட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி நாகலட்சுமி (வயது 26) சம்பவத்தன்று இருவரும் நாகமங்கலம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

அப்பொழுது திருச்சி மதுரை சாலையில் தனியார் என்ஜினியர் கல்லூரி அருகில் வரும் பொழுது மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து கோவிந்தராஜை வழிமறித்து அவரது மனைவி நாகலட்சுமி தாக்கி கழுத்தில் இருந்த இரண்டு பவுன் நகையை பறித்துக் கொண்டு மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த நாகலட்சுமி திருச்சி அரசு மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து நாகலட்சுமி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com