திருச்சியில் இளம் பெண் மாயம் - கடத்தப்பட்டாரா ? போலீசார் விசாரணை

மண்ணச்சநல்லூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்கிற சிவா (வயது 32). இவருக்கும் பவித்ரா (24) எண்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததுகணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
திருச்சியில் இளம் பெண் மாயம் - கடத்தப்பட்டாரா ?  போலீசார் விசாரணை
Published on

திருச்சி,

திருச்சி மண்ணச்சநல்லூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்கிற சிவா (வயது 32). இவருக்கும் பவித்ரா (24) எண்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதில் அவ்வப்போது பவித்ரா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவாராம். பின்னர் சில தினங்கள் கழித்து கணவர் வீட்டுக்கு வந்து விடுவார்.

இந்த நிலையில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்ற பவித்ரா பின்னர் வீடு திரும்பவில்லை.ஆனால் அன்றைய தினம் அவரது பெற்றோர் வீட்டுக்கும் அவர் செல்லவில்லை என்பது தெரிய வந்தது.கிருஷ்ணகுமார் மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து கிருஷ்ணகுமார் மன்னச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்கு பதிவு செய்து மாயமான பவித்ராவை தேடி வருகிறார். இதற்கிடையே பவித்ராவுக்கு சிவா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆகவே அந்த வாலிபர் அவரை கடத்திச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அந்த அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com