திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு மற்றும் சமபந்தி போஜனம் நடைபெற்றதுகலெக்டர் மா.பிரதீப் குமார், மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், ரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு
Published on

திருச்சி:

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உலக எய்ட்ஸ் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் சமபந்தி போஜனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், கலந்து கொண்டு கூட்டு மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், சிறப்பான முறையில் ரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இதில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் எஸ்.லெட்சுமி, மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் எஸ்.எம்.மணிவண்ணன், மாநகர் நல அலுவலர் டாக்டர் ஷர்மிளி,

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுண்நுயிர் துறைத் தலைவர் திடாக்டர் கி.ஞானகுரு, துணை இயக்குநர் (காசநோய்) மரு.சாவித்திரி, எச்.ஐ.வியுடன் வாழ்வோர்க்கான கூட்டமைப்பு தலைவர் ஆர்.தமிழ் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com