அடையாளம் தெரியாத ஆண் பிணம்

உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிராம நிர்வாக அதிகாரி போலீசில் புகார் அளித்தார்.
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

திருச்சி:

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிந்தாமணி தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் கிரேசி மேரி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்,எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com