திருச்சியில் கத்தி முனையில் போலீசை மிரட்டி ரவுடிகள்

திருச்சியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரரை கத்தி முனையில் மிரட்டிய ரவுடியை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்போலீஸ்காரரை மிரட்டுவதை அங்கிருந்த சில இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைரலாக்கி உள்ளனர்
திருச்சியில் கத்தி முனையில் போலீசை மிரட்டி ரவுடிகள்
Published on

திருச்சி:

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் கக்கன் காலனியில் டாஸ்மாக் கடை மற்றும் அதனையொட்டி பாரும் உள்ளது. இதில் திருவெறும்பூர் செல்வபுரம் காந்திநகர் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடி விஷ்ணு என்கிற வெங்கடேஷ் (வயது 27), திருச்சி கைலாஷ் நகர் மேற்கு கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (35) ஆகிய இருவரும் இரவு வெகு நேரம் அமர்ந்து மது அருந்தினர்.

பின்னர் மதுக்கடையை அடைக்க வேண்டிய நேரத்தை தாண்டியும் அவர்கள் வெளியேறாமல் மது கேட்டு டாஸ்மாக் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீஸ்காரர் வீரமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.

பின்னர் பார் ஊழியர்களிடம் தகராறு செய்த ரவுடி விஷ்ணு மற்றும் பிரவீன் குமாரை அவர் பிடிக்க முயன்றார். அப்போது மது போதையில் இருந்த ரவுடி விஷ்ணு போலீஸ்காரருக்கு கத்தி முனையில் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றனர்.

போலீஸ்காரரை மிரட்டுவதை அங்கிருந்த சில இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

பின்னர் அதனை நண்பர்களுக்கு பகிர்ந்தனர். இதனால் கத்தி முனையில் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீரமணி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் ரவுடி விஷ்ணு அவரது நண்பர் பிரவீன் குமார் ஆகிய இருவரும் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com