தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார் தம்பதிக்கும் வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது
தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
Published on

திருச்சி:

முசிறி அடுத்த கோடியம்பாளையம் கூத்தன் செட்டி தெருவை சேர்ந்தவர் குமரவேல் மனைவி முருகாம்பாள் (வயது 35). இவர்கள் இருவரும் முசிறி பெரியார் பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது முத்தம்பட்டி அண்ணா நெசவாளர் காலனியை சேர்ந்த மாணிக்கத்தின் மகன் பாலமுருகன்( 30), மணிவேல் ஆகியோர் இவர்களை வழிமறித்து, முன் விரோதம்  காரணமாக கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இச்சம்பவம் குறித்து முசிறி காவல் நிலையத்தில் முருகாம்பாள் கொடுத்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் கருணாநிதி வழக்கு பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்து, சிறைக்கு அனுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com