இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. குரூப் 2 முதன்மை தேர்வு
இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
Published on

திருச்சி:

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கியது. வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குனர் (சென்னை) அனிதா பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மண்டல இணை இயக்குனர் (வேலை வாய்ப்பு) சந்திரன் மற்றும் துணை இயக்குனர் மகாராணி, உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். இன்று தொடங்கிய இலவச பயிற்சி வகுப்பானது 25.2.2023 வரை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இலவச பயிற்சி முகாமில் பங்கேற்று உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com