மாநகராட்சி இரண்டாவது மண்டல கவுன்சிலர்கள் கூட்டம்

மாநகராட்சி இரண்டாவது மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் தலைமை தாங்கினார்.
மாநகராட்சி இரண்டாவது மண்டல கவுன்சிலர்கள் கூட்டம்
Published on

திருச்சி:

திருச்சி மாநகராட்சி இரண்டாவது மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பி.ஜெயநிர்மலா தலைமை தாங்கினார். உதவி ஆணையர் அக்பர் அலி, உதவி செயற்பொறியாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கவுன்சிலர்கள் வி.சி.கே.பிரபாகரன், எல்.ஐ.சி. சங்கர், செந்தில் பஞ்சநாதன், சண்முகப்பிரியா, கதீஜா, லீலா, ரிஸ்வானா பானு, கீதா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகள், மராமத்து மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் இளநிலை பொறியாளர்கள் ராஜா, திவாகர், சுந்தரவடிவேல், ரவிக்குமார், சுகாதார அலுவலர் டேவிட், சுகாதார ஆய்வாளர் லோகேஷ், உதவி வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com