துறையூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் இன்று பதவி ஏற்பு விழா

புதிதாக தேர்வான 2022-2023 ஆம் ஆண்டிற்கான ரோட்டரி சங்கத் தலைவராக கலியமூர்த்தி, செயலாளராக தில்லைநாயகம், பொருளாளராக துரைராஜ், சங்க ஆலோசகர்களாக ராஜேந்திரன், ஜெயபிரகாசம், பாலசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று பதவி ஏற்க உள்ளனர். டாக்டர் சீனிவாசன் கௌரவ விருந்தினராக பங்கேற்கிறார்.
துறையூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் இன்று பதவி ஏற்பு விழா
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று மாலை துறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு தலைமை விருந்தினராக ஆனந்த ஜோதி ராஜ்குமார் கலந்து கொள்கிறார். கௌரவ விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3000-ன் பப்ளிக் இமேஜ் சேர்மன் டாக்டர்.சீனிவாசன் கலந்து கொள்கிறார்.

சிறப்பு விருந்தினராக ராஜா கோவிந்தசாமி கலந்து பங்கேற்கிறார். விழாவில் புதிதாக தேர்வான 2022-2023 ஆம் ஆண்டிற்கான ரோட்டரி சங்கத் தலைவராக கலியமூர்த்தி, செயலாளராக தில்லைநாயகம், பொருளாளராக துரைராஜ், சங்க ஆலோசகர்களாக ராஜேந்திரன், ஜெயபிரகாசம், பாலசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகிகள் மகேஸ்வரன், அசோக் பெரியசாமி, மணிகண்டன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் ஏழை, எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com