கொப்பம்பட்டியில் ரூ.18 கோடி மதிப்பிலான 60 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு

கொப்பம்பட்டியில் ரூ.18 கோடி மதிப்பிலான 60 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது வருகின்ற 14ந் தேதியன்று பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கொப்பம்பட்டியில் ரூ.18 கோடி மதிப்பிலான 60 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு
Published on

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீகுங்குமாம்பிகை உடனுறை ஸ்ரீசப்தரீஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயிலுக்கு சொந்தமான மானிய நிலங்கள் கொப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ளன. அவ்வாறு உள்ள விளை நிலங்களில் சுமார் 60 ஏக்கர் நிலங்களின் குத்தகை பணம் முறையாக கட்டப்படாமல், ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிய வந்தது.

அதனையடுத்து திருச்சி இணை ஆணையர் செல்வராஜ் உத்தரவின்படி பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன் தலைமையில் பெரம்பலூர் தனி வட்டாட்சியர் பிரகாசம், சரக ஆய்வாளர் தமிழரசி, திருக்கோயில் செயல் அலுவலர் சௌந்தரபாண்டியன், எழுத்தர்கள் செல்வராஜ், சதாசிவம், கோயில் பணியாளர்கள் மற்றும் நில அளவையர் அஜித்குமார், லால் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் உதவியுடன் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து நிலங்களை மீட்கும் பணி தொடங்கியது.

சுமார் ரூ.18.15 கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான 60.51 ஏக்கர் விளைநிலங்கள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட விளைநிலங்களை இந்து அறநிலையத் துறையினர் முறையாக ஏலம் விட அறிவித்ததன் பேரில் வருகின்ற 14ந் தேதியன்று பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com