மசாஜ் சென்டரில் விபச்சாரம்

தில்லை நகர் பகுதியில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்2 இளம் பெண்கள் மீட்பு
மசாஜ் சென்டரில் விபச்சாரம்
Published on

திருச்சி, 

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஸ்பா எனும் மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. இங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக திருச்சி இ.பி. ரோடு தையல்காரை தெருவை சேர்ந்த சபிக் முகமது தில்லை நகர் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான சிறப்பு படை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் திருச்சி கருமண்டபம் ஆர். எம்.எஸ். காலனி 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த பூபதி சஞ்சய் ( வயது 28) என்பவர் இரண்டு இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பூபதியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம்

வாடிக்கையாளர்களுக்கு வலை வீச வைத்திருந்த 2 செல்போன்களை கைப்பற்றினர் .மீட்கப்பட்ட பாண்டிச்சேரியை சேர்ந்த 25 மற்றும் 23 வயது உடைய இரண்டு இளம் பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். கைதான பூபதி மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com