ஆன்லைனில் ரூ.82 ஆயிரத்தை இழந்த தொழிலாளி

ஆன்லைனில் ரூ.82 ஆயிரத்தை தொழிலாளி இழந்தார்ரூ.1600 ரூபாய் முதலீடு செய்ய கேட்டுள்ளார்.
ஆன்லைனில் ரூ.82 ஆயிரத்தை இழந்த தொழிலாளி
Published on

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் டிசிபிஎல் அபார்ட்மெண்டை சேர்ந்தவர் வசந்தவேல் (வயது 37). தொழிலாளியான இவருக்கு அமேசான் ஆன்லைன் இன்ஸ்வெண்ட்மெண்ட் என்ற பெயரில் வலைதள பதிவு ஒன்று வந்துள்ளது. அதனை அவர் திறந்து பார்த்துள்ளார். அப்போது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வாயிலாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர் ரூ.1600 ரூபாய் முதலீடு செய்ய கேட்டுள்ளார்.

வசந்தவேலும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பவே திரும்ப 2200 ரூபாயாக அவருக்கு கிடைத்துள்ளது. இதில் உற்சாகம் அடைந்த அவரிடம் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் கேட்டுக்கொண்டது போல 82 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் இது தொடர்பாக ஆன்லைன் மூலமாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com