

திருச்சி:
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் முதன்மை செயலாளர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் துரைராஜ், ஒன்றியச்செயலாளர் கதிர்வேல், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, கண்ணன், இளைஞரணி பி.ஆர்.சிங்காரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜன், செந்தில், பகுதி செயலாளர்கள் தர்மராஜ், நீலமேகம், ராஜ் முஹம்மது, மணிவேல், மோகன், விஜயகுமார், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.