மணச்சநல்லூர் ஸ்ரீ சவுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு இசை விழா

மணச்சநல்லூர் ஸ்ரீ சவுந்தர்ராஜ பெருமாள் கோவில்புரட்டாசி சிறப்பு இசை விழா
மணச்சநல்லூர் ஸ்ரீ சவுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு இசை விழா
Published on

திருச்சி, 

திருச்சி சரஸ்வதி வித்யாலயம் மற்றும் ஸ்ரீ ரங்கா நுண்கலை மையம் இணைந்து நடத்திய நாத ஸூதா ரஸம் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு இசை நிகழ்ச்சி திருச்சி மணச்சநல்லூர் வட்டம் அழகிய மணவாளன் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சவுந்தர்ராஜ பெருமாள் கோவில் பஜனை மடத்தில் நடைபெற்றது.

இதில் ரமா நாராயணன் சிஷ்யை அனன்யா கணீர் குரலில் பாட வயலின் வித்வான் வேங்கட சுப்ரமணியன், மிருதங்க வித்வான் கம்பரசம்பேட்டை சுவாமிநாதன் ஆகியோர் இசை விருந்து அளித்தனர். இந்த புரட்டாசி சிறப்பு இசை நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வெகு நேரம் அமர்ந்து இளம் கலைஞர்களின் இசையை மெய் மறந்து ரசித்தனர். இசை விழா நிறைவு பெற்ற பின்னரே பக்தர்கள் கலைந்து சென்றனர்.

இந்த தகவலை ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரொட்டேரியன் கே. சீனிவாசன் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com