முசிறி சார்பு நீதிமன்றத்தை மாவட்டம் முதன்மை நீதிபதி ஆய்வு

முசிறி சார்பு நீதிமன்றத்தை மாவட்டம் முதன்மை நீதிபதி ஆய்வு செய்தார்விரைவில் திறப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முசிறி சார்பு நீதிமன்றத்தை மாவட்டம் முதன்மை நீதிபதி ஆய்வு
Published on

திருச்சி:

திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு முசிறிக்கு வருகை புரிந்து, சார்பு நீதிமன்றம் அமைவதற்கு, வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய குற்றவியல் நீதிமன்ற கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுப்பணித்துறையினர்க்கு கட்டிடங்களை புனாரமைப்பு செய்து விரைவில் திறப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆய்வின் போது மாவட்ட உரிமையியல் நீதிபதி பாக்கியராஜ், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜெயசந்திரன், வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன், அரசு வழக்கறிஞர் சப்தரிஷி, மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன், வழக்கறிஞர்கள் ராஜன், பத்ம ராஜன், ரெங்கராஜன், விமல் ராஜ், ராஜசேகரன் வட்டாட்சியர் சண்முகப்பிரியா மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com