திருச்சியில் வக்கீலுக்கு கத்தி குத்து

இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்
திருச்சியில் வக்கீலுக்கு கத்தி குத்து
Published on

திருச்சி

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 28). இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் குட்செட் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் அவரது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரவிக்குமார் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் வக்கீலை கத்தியால் குத்தியவர் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் (25)என்பது தெரியவந்தது பின்னர் அவரை போலீசார் கைது செய்து கைது ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com