காமராஜர் மக்கள் கட்சியின் ஐம்பெரும் விழா

காமராஜர் மக்கள் கட்சியின் ஐம்பெரும் விழா நடைபெற்றதுதமிழருவி மணியன் பங்கேற்பு
காமராஜர் மக்கள் கட்சியின் ஐம்பெரும் விழா
Published on

திருச்சி:

காமராஜர் மக்கள் கட்சியின் மேற்கு மண்டல இளைஞர் அணி சார்பில் ஐம்பெரும் விழா, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளத்தில் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் இளைஞர் அணி தலைவர் நடிகர் ஜீவா தங்கவேல் உள்பட அனைத்து மாநில, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் கட்சியின் முதல் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாநில செயல்வீரர்கள் கூட்டமும், தகவல் தொழில்நுட்ப பயிலரங் கமும், பட்டிமன்றமும் நடைப்பெற்றது. , இறுதியாக தமிழருவி மணியன் காமராஜர் மக்கள் கட்சி, தமிழ் நாட்டிற்கு ஏன் தேவை என எழுச்சியுரை ஆற்றினார். இதில் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கணிம வளக் கொள்ளை, 10 சதவிகித இட ஒதுக்கீடு, திருக்குறளை,தேசிய நூலாக அறிவித்திடுக, விலைவாசி உயர்வு, மதுக்கடைகளை மூடும் செயல் திட்டத்தை அறிவித்திடுக, முட்டை கொள்முதல் ஊழல் - அதே பாதையில் பயணிப்பது ஏன்? போன்ற தீர்மானங்கள் மாநில செயல் வீர்ரகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com