இலவச வீட்டுமனை நிலங்கள் தனி நபரால் அபகரிப்பு

பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் நவல்பட்டு அருகே பரபரப்பு
இலவச வீட்டுமனை நிலங்கள் தனி நபரால் அபகரிப்பு
Published on

திருச்சி,

திருச்சி இ.பி. ரோடு கருவாட்டு பேட்டை பகுதி–யைச் சேர்ந்த குப்புசாமி மனைவி முத்தம்மாள், கீரைக்கொல்லை தெரு கிருஷ்ணன் ரோடு பகுதியை சேர்ந்த ராஜாத்தி, திருச்சி பூலோகநாதர் கோவில் தெருவை சேர்ந்த நீலா, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் அவர்கள் கூறியி–ருப்பதாவது:-

நாங்கள் மேற்கண்ட முக–வரியில் வாடகை வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு தமிழக அரசால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சென்ட் நிலம் வீதம் நவல்பட்டு பூலாங்குடி கிராமத்தில் இலவச வீட்டு மனையாக வழங்கப்பட்டது.அப்போது எங்களுடன் சேர்த்து மொத்தம் 250 பேருக்கு பட்டா வழங்கப்பட் டது. இந்த நிலையில் தற் போது அரியமங்கலம் உக் கடை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பட்டா ஆவணங்களை அடயாட்களை வைத்து மிரட்டி பிடுங்கி வருகிறார். மேலும் நிலம் என்னுடைய பூர்வீக இடம். உங்களுக்கு யாருக்கும் இதில் உரிமை இல்லை. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் தருகிறேன் என மிரட்டி எங்களிடமிருந்து பட்டாக்களை பறித்து வைத்துக் கொண்டு வேறு நபர்களுக்கு இரண்டு லட்சம், 3 லட்சம் என விற்பனை செய்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் எங்களது இடத்தில் எந்தவித இடை–யூறும் இல்லாமல் வீடு கட்டி வசிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com