என்ஜினீயரின் லேப்டாப் துணிகர திருட்டு

திருச்சியில் ஓடும் பேருந்தில் துணிகரம் போலீசார் வழக்கு பதிந்த விசாரணை
என்ஜினீயரின் லேப்டாப் துணிகர திருட்டு
Published on

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலக ரோடு குமுளி தோப்பு பகுதி–யைச் சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஐ.டி. கம்பெனியில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனது லேப் டாப்புடன் ெநம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து மத்திய பஸ் நிலையம் செல்லும் ஒரு டவுன் பஸ்சில் வீடு திரும்பினார். பின்னர் பஸ் நிலையம் வந்ததும் லக்கேஜ் வைக்கும் பகுதியில் பார்த்தபோது லேப்டாப்பை காணாமல் திடுக்கிட்டார். மர்ம நபர்கள் ஓடும் பஸ்சில் லேப்டாப்பை திருடிக்கொண்டு இறங்கி சென்று விட்டனர். இதுகுறித்து குமார் கொள்ளிடம் போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com