மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
Published on

மண்ணச்சநல்லூர்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீருக்கு அவதிப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கோவை-உளுந்தங்குடி ரோட்டில் திரண்டு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த மண்ணச்சநல்லூர் பேரூராட்சி தலைவர் சிவசண்முககுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com