பெண்ணின் பணத்தை டெபாசிட் செய்யாமல் ஏமாற்றி வங்கி அதிகாரி மீது வழக்கு

பெண்ணின் பணத்தை டெபாசிட் செய்யாமல் ஏமாற்றி வங்கி அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வங்கிக்கு நித்தியா என்ற ஒரு பெண்மணி ரூ. 25 ஆயிரம் டெபாசிட் செலுத்துவதற்காக வந்தார்.
பெண்ணின் பணத்தை டெபாசிட் செய்யாமல் ஏமாற்றி வங்கி அதிகாரி மீது வழக்கு
Published on

திருச்சி,

திருச்சி மேலப்புலி வார்டு சாலையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் மேலாளராக பணியாற்றி வருபவர் லதா (வயது 40). அதே வங்கியில் தொழில் வளர்ச்சி துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் தமிழரசன் (28). இந்த வங்கிக்கு நித்தியா என்ற ஒரு பெண்மணி ரூ. 25 ஆயிரம் டெபாசிட் செலுத்துவதற்காக வந்தார்.

பின்னர் அந்தத் தொகையை அங்கிருந்த அதிகாரி தமிழரசனை அணுகி டெபாசிட்டில் செலுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் பணத்தை நித்யாவின் வங்கி கணக்கில் செலுத்தாமல் அவரை ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து வங்கி மேலாளர் லதா கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com