முசிறி அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆருத்ர தரிசனம்

முசிறி அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆருத்ர தரிசனம் நடைபெற்றது ஆருத்ர தரிசன விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் நடராஜர பெருமான், சிவகாமி தாயார் உற்சவத்திற்கு 27 விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன
முசிறி அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆருத்ர தரிசனம்
Published on

முசிறி:

முசிறி ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆருத்ர தரிசன விழா நடைபெற்றது. ஆருத்ர தரிசன விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் நடராஜர பெருமான், சிவகாமி தாயார் உற்சவத்திற்கு 27 விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனை அடுத்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டன.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நடராஜர் பெருமானை ஆண்களும், சிவகாமி தாயாரை பெண்களும் சுமந்து பிரகார வீதியில் வலம் வந்தனர். பின்னர் மகா தீபாராதனை கட்டப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி கமல் மற்றும் நிர்வாகிகள் மனோகரன், ரவிச்சந்திரன், இளங்கோவன், காஞ்சனா, சேகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com