லால்குடியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டகலெக்டர் பிரதிப் குமார் அறிவுறுத்தலின்படி லால்குடி நகராட்சி பகுதியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.
லால்குடியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார்
Published on

திருச்சி :

லால்குடி நகராட்சி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.

மாவட்டகலெக்டர் பிரதிப் குமார் அறிவுறுத்தலின்படி லால்குடி நகராட்சி பகுதியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

முன்னதாக சந்தைப்பேட்டை புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நகராட்சி ஆணையர் குமார் துணைத்தலைவர் சுகுனா ராஜ்மோகன் முன்னிலையில் சவுந்தரபாண்டியன் எம் எல் ஏ கொடி அசைத்து தொடங்கிவைத்து பேரணியில் கலந்துகொண்டார்.

பேரணியில் லால்குடி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நெஸ்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் எல் என் பி பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் கோஷமிட்டு பேரணியில் சென்றனர்.

பேரணி சந்தைப்பேட்டையில் தொடங்கி கடைவீதி பஸ் நிலையம் அரியலூர் சாலையில் தனியார் திருமணமண்டபம் அருகே நிறைவுற்றது. இதில் நகராட்சி பணியாளர்கள் தன்னார்வலர்கள் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com