மின் தடையால் லிப்டில் சிக்கிய 5 பெண்கள்

திருச்சி கிறிஸ்தவ தேவாலயத்தில் 5 பெண்கள் லிப்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டதுதீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு உபகரணம் உதவியுடன் மீட்டனர்
மின் தடையால் லிப்டில் சிக்கிய 5 பெண்கள்
Published on

திருச்சி,

திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனைக்கு வந்த கர்ப்பிணி பெண் உட்பட 5 பெண்கள் தரைத்தளத்தில் நின்றுள்ள லிப்ட்டில் ஏறி உள்ளனர்.முதல் தளத்திற்கு செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக லிப்ட் பழுதாகி பாதியில் நின்று விட்டது. லிப்ட் திடீரென நின்றதால், அதில் இருந்த பெண்கள் படபடப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லிப்ட்டில் சிக்கிக்கொண்டிருந்த 5 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். இது பற்றி தீயணைப்பு படை வீரர்கள் கூறும்போது, மின்தடை காரணமாக லிப்ட் இயக்கம் தடைபட்டுள்ளது. அப்போது ஜெனரேட்டரை இயக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது இயங்கவில்லை.இதன் காரணமாக லிப்டில் சிக்கி இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்ததும் உதவி மாவட்ட அலுவலர் சத்திய வர்த்தனன் தலைமையில் சென்றோம். அங்கு லிப்டில் சிக்கி இருந்தவர்களை, ஹைட்ராலிக் ஸ்பிளட்டர் கருவி மூலம் பத்திரமாக மீட்டோம் என்று கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com