

ஆலங்குளம்:
ஆலங்குளம் பகுதியில் நான்கு வழிச் சாலை பணியின் போது ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. இருப்பினும் சில மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடங்களில் நடவு செய்யும் பணியை சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மழை நன்கு பெய்து வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மரங்களை வேரோடு பிடுங்கி, மாற்று இடங்களில் நடவு செய்யும் பணியை பூவுலகை காப்போம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே நடவு செய்த மரக்கன்றுகளுக்கு வாரந்தோறும் தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தொடந்து அதிகளவு பனை விதைகளும் விதைக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் இச்செயலுக்கு ஆலங்குளம் பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.