உலக தண்ணீர் தினத்தையொட்டி கீழநத்தம் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும்விழா

நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவி அனுராதா ரவிமுருகன் தலைமை தாங்கினார்.பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நடப்பட்டது.
 கீழநத்தம் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
 கீழநத்தம் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

நெல்லை:

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கீழநத்தம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கீழநத்தம் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் பலவேசம் இசக்கி பாண்டி, சுசீலா, பரமசிவன், உலகநாதன், சுரேஷ், ராமலட்சுமி, பூர்ணிமா, ராஜம்மாள், பாரதி மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள், மேற்பார்வையாளர் முருகன், ஊராட்சி செயலர் சுபாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் புளியமரம், செம்மரம், வேம்பு ஆகிய மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து பஞ்சாயத்தின் கீழ் வரும் அனைத்து பகுதிகளிலும் சுமார் 300 மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com